பள்ளி மாணவியை ஆபாச புகைப்படம் எடுத்து மிரட்டிய இளைஞன்..!
நாமக்கல் அருகே பேஸ்புக் மூலம் பழகிய பள்ளி மாணவியை ஆபாச புகைப்படம் எடுத்து ஆசைக்கு இணங்குமாறு மிரட்டிய இளைஞன் போக்சோவில் கைது செய்யப்பட்டுள்ளான்.
ராசிபுரம் பகுதியைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு மாணவிக்கும் ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்ற இளைஞனுக்கும் ஃபேஸ்புக்கில் பழக்கம் ஏற்பட்டு நாளடைவில் காதலாக மாறியுள்ளது. கடந்த 5 மாதங்களாக வீடியோ காலில் பேசி பழகி அவன் மாணவியை ஆபாசமாக புகைப்படம் எடுத்துள்ளார்.
பின்னர் புகைப்படங்களை செல்போனுக்கு அனுப்பி தனது ஆசைக்கு இணங்குமாறும் இல்லையெனில் இணையத்தில் வெளியிடப் போவதாகவும் தொடர்ந்து மிரட்டியுள்ளார். இதனால் பயந்து போன மாணவி தாயாரிடம் விவரத்தை கூறி ராசிபுரம் மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
இதையடுத்து தமிழ்ச்செல்வனை போக்சோ சட்டத்தில் கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த ஆபாச புகைப்படங்களை பறிமுதல் செய்துள்ளனர்.






