சசிகலாவை வரவேற்று ஒட்டப்படும் போஸ்டர்கள்..!
விருதுநகர் மாவட்டத்தில் அதிமுக தொண்டர்கள் சிலர் சசிகலாவை வரவேற்கும் சூழ்நிலையில் தங்களது கட்சி அடையாள அட்டையையும் அடித்து ஒட்டியுள்ளனர். சென்னையை சேர்ந்த அதிமுக தொண்டர்கள் அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா என்று குறிப்பிட்டு மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர் .
அந்த சுவரொட்டியில் தங்களது அதிமுக அடையாள அட்டையின் நகலையும் அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






