--- --:--:-- --

ரசிகர்களை சந்தித்த நடிகர் விஜய்..!

17

சென்னை அடுத்த பனையூரில் உள்ள அலுவலகத்தில் நடிகர் விஜய் ரசிகர்களை சந்தித்துள்ளார். விஜய் தன்னுடைய ரசிகர்களை குறிப்பிட்ட மாதங்களுக்கு இடைவெளியில் சந்தித்து பேசுவது வழக்கம்.

 

ஆனால் கடந்த ஆண்டு கொரொனா பிரச்சினை நிலவி வந்த நிலையில் அவர் அதிகமாக ரசிகர்களை சந்திக்க வில்லை. இரண்டு முறை மட்டும் அவர் சந்தித்திருந்தார். இந்நிலையில் பொங்கலன்று மாஸ்டர் திரைப்படம் வெளியாகி வெற்றி அடைந்திருந்தது.

 

இந்த நிலையில் இன்று திடீரென ரசிகர்களை வரவழைத்து சந்தித்துள்ளார். குறிப்பாக விழுப்புரம், தேனி ஆகிய மாவட்டங்களை சேர்ந்த விஜய் மக்கள் இயக்கத்தின் நிர்வாகிகள் மற்றும் ரசிகர்களை வரவேற்றுள்ளார். இந்த சந்திப்பு எப்போதும் நடைபெறக்கூடிய வழக்கமான சந்திப்பு தான் என்று விஜய் தரப்பில் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon