பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடக்கம்..!

பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு மீண்டும் தொடங்க உள்ளது. மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய் என பெரும் நட்சத்திரப் பட்டாளத்துடன் இந்த படம் தொடங்கப்பட்டது.

 

தாய்லாந்து பாண்டிச்சேரியில் படப்பிடிப்பு நடந்து வந்த நிலையில் கொரொனா ஊரடங்கால் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

 

இந்த நிலையில் தற்போது படப்பிடிப்பை மீண்டும் தொடங்க படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில் ஹைதராபாத்தில் அரங்குகள் அமைக்கப்பட்டு பொன்னியின் செல்வன் படப்பிடிப்பு தொடங்க உள்ளது. படத்தில் அனைத்து நடிகர்களும் பங்கேற்கின்றனர்.


Leave a Reply