--- --:--:-- --

வெள்ளை நிற ஜெர்சி அணிந்தது பெருமைமிக்க தருணம் – கிரிக்கெட் வீரர் நடராஜன்

20

வெள்ளை நிற ஜெர்சி அணிந்தது பெருமைமிக்க தருணம் என்று தமிழக கிரிக்கெட் வீரர் நடராஜன் தெரிவித்துள்ளார். காயம் காரணமாக இந்திய அணியிலிருந்து உமேஷ் யாதவ் விலகிய நிலையில் அவருக்கு பதிலாக 18 பேர் கொண்ட அணியில் தமிழக வீரர் நடராஜன் சேர்க்கப்பட்டார்.

 

முதல் முறையாக டெஸ்ட் அணியில் இணைந்துள்ள நடராஜனுக்கு அனைத்து முன்னணி வீரர்கள் பலர் வாழ்த்துக்களையும் ஆலோசனைகளையும் தெரிவித்து வருகின்றனர். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி நாளை மறுநாள் சிட்னி மைதானத்தில் நடைபெறுகிறது,

 

இந்த போட்டியில் தமிழகத்தை சேர்ந்த நடராஜன் அறிமுக வீரராக களம் இறங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது, இந்நிலையில் இந்திய டெஸ்ட் அணியில் வெள்ளை நிற ஜெர்சி அணிந்து நடராஜன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

 

அதில் வெள்ளை நிற ஜெர்சி அணிவது பெருமைமிக்க தருணம் என்றும் அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ள தயார் எனவும் அறிவித்துள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon