உறைபனியில் உறைந்து இருக்கும் நூடுல்ஸ் மற்றும் முட்டை..!

ம்மூரில் மார்கழி மாதம் பணிக்கே பலரால் தாக்குபிடிக்க முடியாது. ஆனால் சைபீரிய மக்கள் -40 டிகிரி செல்சியஸில் உறைந்துள்ளனர். பொதுவாக வட துருவப் பகுதிகளில் மிக கடுமையான பனிப்பொழிவு இருப்பது வழக்கம். இந்த பகுதிகளில் வாழும் மக்களுக்கு கடும் பனிப்பொழிவு என்பது புதிய விஷயம் அல்ல.

 

ஆனால் அங்கு தற்போது வீசிவரும் பனிப்பொழிவு வழக்கத்தை விட அதிகமானதாக கருதப்படுகிறது. இதனால் மக்கள் குளிரில் உறைந்துள்ளனர். இந்த நிலையில் கடும் பனியில் காற்றில் உறைந்து போய் நிற்கும் முட்டை மற்றும் நூடுல்ஸ் ஆகியவற்றின் புகைப்படத்தை ஒருவர் பதிவிட்டுள்ளார்.

 

இந்த புகைப்படத்தை சைபீரிய பகுதியில் வாழும் நபர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பகுதியில் -75 டிகிரி செல்சியஸ் நிலவியதாக அவர் தனது பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

கிட்டத்தட்ட அந்தரத்தில் முட்டை நூடுல்ஸ் இருப்பது போன்ற ஒரு உணர்வைத் தரும் இந்த புகைப்படம் நெட்டிசன்கள் இடையே தற்போது வைரலாகி வருகிறது. அது மட்டுமில்லாமல் பலரும் பல விதமான கருத்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.


Leave a Reply