தடுப்பூசி தொடர்பாக சிலர் வெளியிடும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்.!

பெருந்தொற்று தடுப்பூசி பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில் தனிப்பட்ட ஆதாயத்திற்காக சிலர் வெளியிடும் பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்று பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார். குஜராத் மாநிலம் ராஜ்காட்டில் கட்டப்பட்டு உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை வளாகத்தில் பிரதமர் மோடி காணொலி மூலம் அடிக்கல் நாட்டினார்.

 

பின்னர் பேசிய அவர் நாட்டில் பிறந்து விட்டால் புதிதாக பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருகிறது என்றும், அடுத்த ஆண்டில் மிகப்பெரிய அளவில் பெருந்தொற்று தடுப்பு மருந்து வழங்கும் பணியை மேற்கொள்ள உள்ளதாகவும் உத்தரவிட்டார்.

 

உலக ஆரோக்கியத்தின் மையமாக இந்தியா உருவெடுத்து உள்ளது என பெருமிதத்துடன் கூறிய பிரதமர் மோடி அடுத்த ஆண்டு சுகாதாரத்துறை இந்தியாவின் பங்கை மேலும் பலப்படுத்த வேண்டும் என்றார்.

 

தனிப்பட்ட ஆதாயத்திற்காக சிலர் வெளியிட்டுள்ள பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம் என்றும், பெருந்தொற்று தடுப்பூசிக்கான மருந்துகள் பயன்பாட்டிற்கு வரும் வேளையில் வதந்திகள் பரப்பப்படுகின்றன எனவும் அதனை மக்கள் நம்ப கூடாது எனவும் பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.


Leave a Reply