சித்ராவின் மரண வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற அவரது பெற்றோர் மனு அளித்துள்ளனர். முதலமைச்சரின் தனிப்பிரிவு அலுவலரை சந்தித்து அவர்கள் இந்த மனுவை அளித்துள்ளனர்.
சின்னத்திரை நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட வழக்கில் காவல்துறை அது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். இதற்கு தற்கொலைக்கு தூண்டியதாக சித்ராவின் கணவர் ஹேம்நாத் ஏற்கனவே கைது செய்யப்பட்டுள்ளார்.
மற்றொரு பக்கம் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வந்தது. இந்த விசாரணையில் வரதட்சணை கொடுமை எதுவும் நடைபெற்றுள்ளதா என விசாரணை முடிந்து அந்த அறிக்கை கொடுக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக விசாரிப்பதற்கு எதுவுமில்லை என்ற நிலையில் இருக்கும் போது இரு தரப்பும் பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கின்றனர்.
இந்நிலையில் சித்ராவின் பெற்றோரும் இதுதொடர்பாக புகார் கொடுத்துள்ளனர். முதலமைச்சர் தனிப்பிரிவிடம் இந்த புகார் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளனர்.