ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து கார்களிலும் ஏர்பேக்குகளை கட்டாயப்படுத்த வேண்டும்..!

டுத்தாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் அனைத்து கார்களிலும் சீட்டுகளில் ஏர்பேக்குகள் கட்டாயப்படுத்த வேண்டும் என மத்திய அரசின் வரைவு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஓட்டுனர் இருக்கையை தவிர மற்றொரு முன்பக்க இருக்கையிலும் பொருத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஏற்கனவே உள்ள கார்களில் மாடல்களில் 2021 ஆம் ஆண்டு ஜூன் ஒன்றாம் தேதி முதல் ஏர் பேக் வசதி ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு கூறியுள்ளது. இந்த வரைவு அறிக்கை மீது பொதுமக்கள் தங்கள் கருத்துக்களை தெரிவிக்கலாம் என்று மத்திய சாலை போக்குவரத்து துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.


Leave a Reply