10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடைபெறும்..!

டப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். கொரொனா ஊரடங்கு காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறக்கப்படாததால் ஆன்லைன் வகுப்புகளில் மாணவர்கள் பயின்று வருகின்றனர்.

 

பிரிட்டனில் உருமாறிய கொரொனா தமிழகத்திலும் பரவும் அபாயம் இருப்பதால் பள்ளிகள் திறக்கப்படுமா என்பதில் சந்தேகம் நீடிக்கிறது. இந்த சூழலில் செய்தியாளர்களை சந்தித்த பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் நடப்பு கல்வியாண்டில் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் உறுதியாக நடத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

 

கல்வி தொலைக்காட்சியில் திருவள்ளுவர் படத்தில் காவி இடம் பெற்ற விவகாரம் குறித்த கேள்விகள் பேராசிரியர் ஒருவரின் தவறால் திருவள்ளுவர் படம் காவியில் இடம் பெற்றுவிட்டதாக பதிலளித்தார். இதுகுறித்து அவரிடம் விளக்கம் கேட்கப்பட்டு இருக்கிறது என்றும் பேராசிரியரை உடனடியாக பணி இடைநீக்கம் செய்ய முடியாது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.


Leave a Reply