--- --:--:-- --

ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் 28ஆம் தேதி தொடக்கி வைக்கிறார்..!

7

நாட்டின் முதல் ஓட்டுனர் இல்லா மெட்ரோ ரயில் சேவையை வரும் 28ஆம் தேதி பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளார்.

 

இதுகுறித்து டெல்லி மெட்ரோ ரயில் நிர்வாகம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் ஓட்டுனர் இல்லாமல் முழுக்க முழுக்க தானியங்கி முறையில் இயங்கும் மெட்ரோ ரயில் சேவை வருகிற 28-ஆம் தேதி டெல்லியில் தொடங்க உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

நாட்டின் முதல் ஓட்டுநர் இல்லா ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியேற்றத்துடன் தொடங்கி வைக்க உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. டெல்லி ஜனக்பூரில் மேற்கு தாவரவியல் பூங்கா வரையிலான 37 கிலோ மீட்டர் தூரத்திற்கு இந்த ரயில்கள் இயக்கப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

 

மேலும் அன்றைய நிகழ்ச்சியில் தேசிய பொது போக்குவரத்தை அட்டை திட்டத்தையும் பிரதமர் மோடி தொடங்கி வைக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon