--- --:--:-- --

16 ஆண்டுகளை நிறைவு செய்துள்ள முன்னாள் கேப்டன் தோனி..!

3

ந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் 16வது ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டாடும் வகையில் அவரது ரசிகர்கள் சிக் ஸ்டீன் இயர்ஸ் ஆப் ஐ கானிக் என்ற ஹெஸ்டெக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.

 

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தலை என ரசிகர்களால் அன்பாக அழைக்கப்படுபவர் மகேந்திர சிங் தோனி. 16 ஆண்டுகளுக்கு முன்னதாக 2004ஆம் ஆண்டு இதே நாளில்தான் வங்கதேசத்திற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்திய அணியில் தோனி அறிமுக வீரராக களம் இறக்கப்பட்டார்.

 

பின்னர் அசுர திறமையால் இந்திய கிரிக்கெட் அணி கேப்டனாக நியமிக்கப்பட்டார். 20 ஓவர் உலக கோப்பை சாம்பியன்ஸ் டிராபி 50 ஓவர் உலகக் கோப்பையை வென்ற ஒரே இந்திய கேப்டன் என்ற சிறப்பு பெருமையையும் பெற்றார்.

 

இந்த சூழலில் இந்த ஆண்டு தனது ஓய்வு முடிவை அறிவித்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். இந்த நிலையில் தோனியின் 16வது ஆண்டு கிரிக்கெட் வாழ்க்கையை கொண்டாடும் விதமாக அவரது ரசிகர்கள் சிக் ஸ்டீன் இயர்ஸ் ஆப் ஐ கானிக் என்ற ஹெஸ்டெக்கை ட்ரெண்ட் செய்து வருகின்றனர். மேலும் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon