பழைய கார்களுக்கு வண்ணம் பூசி புதுப்பித்து ஏமாற்றி விற்று மோசடி..!
அசாமில் பழைய கார்களுக்கு வண்ணம் பூசி புதுப்பித்து ஏமாற்றி விற்ற மாருதி சுசுகி வாகன விற்பனையாளர் உரிமம் பறிக்கப்பட்டுள்ளது. கோகாத்தியில் உள்ள மாருதி சுசுகி வாகன விற்பனையகத்தில் பழைய கார்களை புதுப்பித்து விற்று வாடிக்கையாளர்களை ஏமாற்றுவதாக போக்குவரத்து ஆணையரிடம் புகார் வைக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில் அந்த விற்பனையகத்தில் மாவட்டப் போக்குவரத்து அதிகாரி திடீர் ஆய்வு செய்தார். அப்போது பழைய வாகனங்களுக்கு வண்ணம் பூசி அதை புதிது போல ஆக்கி விற்பனை செய்ததை கண்டுபிடித்தனர். இதை வாகன விற்பனையாளரும் ஒப்புக்கொண்டுள்ளார்.
இதையடுத்து வாகன விற்பனை உரிமத்தை பறித்துள்ளதுடன் விசாரணை முடியும் வரை எந்த வாகனத்தையும் விற்க தடை விதிக்கப்பட்டுள்ளது.






