குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்துடன் எதிர்க்கட்சியினர் இன்று சந்திப்பு..!
வேளாண் சட்டம் தொடர்பாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி தலைமையில் எதிர்க் கட்சி பிரதிநிதிகள் இன்று மாலை குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்தை சந்திக்க உள்ளனர்.
கொரொனா விதிகள் காரணமாக எதிர்க்கட்சிகளை சேர்ந்த 5 பேர் மட்டுமே குடியரசுத் தலைவரை சந்திக்க அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் சீதாராம் யெச்சூரி தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் உட்பட ஐந்து பேர் மட்டும் இந்த சந்திப்பில் கலந்துகொள்ள உள்ளனர்.






