திடீரென தோன்றி, திடீரென மறையும் மர்ம தூண்கள்..!
ரோமானியா, உட்டாவை தொடர்ந்து அமெரிக்காவின் கலிபோர்னியா மலை உச்சியிலும் மர்மமான முறையில் உலோக தூண் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ரோமானியா உட்டா பாலைவனம் போன்ற இடங்களில் இதேபோல் தூண்கள் அடுத்தடுத்துக் கண்டுபிடிக்கப்பட்டன.
பின்னர் அந்த தூண்கள் மர்மமான முறையில் மாயமாகின. அவற்றை யார் வைத்தனர், பின்னர் யார் எடுத்துச் சென்றனர் என தெரியாததால் இதன் பின்னணியில் வெளிகிரக வாசிகளாக இருக்கலாம் என சிலர் சந்தேகம் எழுப்பி வந்தனர். இந்நிலையில் கலிபோர்னியாவில் பத்தடி உயரத் தூண் புதன்கிழமை காலை கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து தகவல் வேகமாக பரவவே அதன் அருகே நின்று பலர் செல்பி எடுத்த நிலையில் புதன்கிழமை இரவில் காணாமல் போய்விட்டது. இது குறித்து கலிபோர்னியா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.






