--- --:--:-- --

மத்திய அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகை..! 3 அடுக்கு பாதுகாப்பு..!

9

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தமிழகம் வருகையை ஒட்டி சென்னையில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.மத்திய அரசில் பிரதமர் மோடிக்கு அடுத்து அதி முக்கிய நபராக கருதப்படுபவர் உள்துறை அமைச்சர் அமித் ஷா. இவருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கூறப்படும் நிலையில் சென்னை பயணத்தில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

 

அமித்ஷா வருகையையொட்டி அமித்ஷா வருகையையொட்டி பாதுகாப்பு வளையத்திற்குள் வந்துள்ளது சென்னை மாநகரம். அமித்ஷா வந்திறங்கும் சென்னை விமான நிலையம் அவர் தங்கும் நட்சத்திர விடுதி, கலைவாணர் அரங்கம் முடிந்த இடங்களில் மூன்றடுக்கு பாதுகாப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

 

மூன்று கூடுதல் ஆணையர்கள், 4 இணை ஆணையர்கள், 16 துணை ஆணையர்கள் தலைமையில் சுமார் 3 ஆயிரம் காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். அமித்ஷா செல்லும் சாலைகளில் கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

 

அவர் தங்கும் நட்சத்திர விடுதி, கலைவாணர் அரங்கம் உள்ளிட்ட இடங்களில் கண்காணிப்பு குழு மோப்பநாய் பிரிவினர் வெடிகுண்டு நிபுணர்கள் 24 மணி நேரமும் சோதனை நடத்தி வருகின்றனர்.

 

இதனிடையே மத்திய உள்துறை அதிகாரிகள் டெல்லியில் இருந்து மூன்று நாட்களுக்கு முன்பே சென்னை வந்து முகாமிட்டுள்ளனர். அவர்கள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணிக்கும் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon