ஈரமான கையோடு சுவிட்ச் பாக்சை தொட்ட 17 வயது சிறுவன் உயிரிழப்பு..!
சென்னை கொடுங்கையூரில் ஈரமான கையோடு சுவிட்ச் பாக்சை தொட்ட 17 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தார். பெரம்பலூரை சேர்ந்த சஞ்சய் என்ற சிறுவன் கொடுங்கையூர் டீச்சர்ஸ் காலனியில் உறவினர் வீட்டில் தங்கியிருந்து ஜூஸ் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
இந்த நிலையில் நேற்று இரவு வீட்டில் குளித்து முடித்து வந்து ஈரமான கையோடு செல்போனில் சார்ஜ் போடுவதற்காக சுவிட்ச் பாக்ஸை தொட்டுள்ளார். அப்போது மின்சாரம் தாக்கி கீழே தூக்கி வீசப்பட்டு தஞ்சை மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.






