20 ரூபாய்க்கு சேலை அறிவித்ததால் அலைமோதிய மக்கள் கூட்டம்..!
சேலம் மாவட்டம் ஆத்தூரில் அனைத்து வகையான துணிகளும் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் என அறிவித்த துணிக் கடையில் கூட்டம் அலைமோதிய.து அந்த கடைக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனர்.
ராணிப்பேட்டை பகுதியில் இயங்கிவந்த ராசி சில்க்ஸ் என்ற துணிக்கடையை ஆனந்தம் சில்க்ஸ் நிறுவனம் விலைக்கு வாங்கியுள்ளது. அங்கிருந்த பழைய துணிகளை சலுகை விலையில் விற்பனை செய்து விட்டு புதிய துணிகளை வாங்க எண்ணிய உரிமையாளர் பழைய சட்டை, சேலை மெட்டீரியல்கள் 20 ரூபாய் முதல் 25 ரூபாய் வரை விற்கப்படும் என அறிவித்துள்ளார்.
இதனையடுத்து அங்கு நூற்றுக்கணக்கில் திரண்ட மக்கள் கொரொனா தடுப்பு விதிமுறைகளை காற்றில் பறக்க விட்டனர். தகவலறிந்து வந்த நகராட்சி அதிகாரிகள் கடையை பூட்டி சீல் வைத்து சென்றனர்.






