--- --:--:-- --

சாலையில் நடந்த சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை – பட்டதாரி வாலிபர் போக்ஸோவில் கைது !!!

0.2

கோவை சுந்தராபுரம் பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமி ஒருவர் வீட்டின் அருகே உள்ள கடைக்கு செல்ல சுந்தராபுரம் பழனியப்பா தியேட்டர் அருகே சாலையில் நடந்து சென்றுள்ளனர். மாலை நேரம் என்பதால் சாலை இருட்டாக இருந்ததாக கூறப்படுகிறது.

 

அப்போது,இருசக்கர வாகனத்தில் அங்கு வந்த இளைஞர் ஒருவர் சாலையில் சென்ற சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்துவிட்டு தப்பி சென்றுள்ளார். சிறுமியின் அலறல் சத்தம் கேட்ட அங்கிருந்த இளைஞர்கள் சிலர் தப்பி சென்றவரை விரட்டி பிடித்தனர். இதையடுத்து பிடிபட்ட இளைஞரை குனியமுத்தூர் போலிஸில் ஒப்படைத்தனர்.

 

பின்னர்,போலீஸார் நடத்திய விசாரணையில் பிடிபட்ட இளைஞர் போத்தனூர் கணேசபுரத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் சுதர்சன் (28) என்பதும், சமீபத்தில் கல்லூரி படிப்பு முடித்து, தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகார் ௮டிப்படையில் சுதர்சன் மீது போக்ஸோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த போலீஸார் கைது செய்து சிறையிலடைத்தனர்.

 

சமீபகாலமாக கோவையில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிகரித்து வரும் நிலையில் இச்சம்பவம் பொதுமக்களிடையே மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon