கொரொனாவை கட்டுப்படுத்துவதில் மையப் புள்ளியாக இந்தியா திகழ்கிறது..!
கொரொனாவை கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளை உலகின் மையப் புள்ளியாக இந்தியா திகழ்வதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். கொரொனா தொடர்பான கருத்தரங்கில் காணொளி முறையில் பங்கேற்று பேசிய பிரதமர் சிகிச்சை அனுபவங்கள் மற்றும் திறமையான ஆராய்ச்சிகள் மூலம் இது சாத்தியமாகியிருக்கிறது என தெரிவித்தார்.
கொரொனாவை வெற்றிகரமாக எதிர்கொள்ள இந்தியாவின் அறிவியல் நிறுவனங்கள் உதவிகரமாக இருந்ததாகவும் இவை நாட்டின் மிகப்பெரிய சொத்துக்கள் என்றும் பிரதமர் புகழாரம் சூட்டியுள்ளார்.
கொரொனாவுக்கான மருந்து கண்டுபிடிப்பதில் உலகின் முன்னணி நாடுகளில் ஒன்றாக இந்தியா திகழ்வதாகவும் உலகில் பயன்படுத்தப்படும் தடுப்பூசிகளில் 60 சதவீதம் இந்தியாவில் தயாராவதாக பிரதமர் தெரிவித்தார்.
உலகிலேயே மிகச் சரியான நேரத்தில் பொது முடக்கத்தை அறிவித்த நாடுகளில் சில நாடுகளில் இந்தியாவும் ஒன்று என குறிப்பிட்ட பிரதமர் கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வை முன்னதாகவே நாட்டு மக்களுக்கு ஏற்படுத்தியதாகவும் தெரிவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய தொழில் அதிபர் பில்கேட்ஸ் உலக அளவில் கொரொனாவை முறியடிக்க இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் உற்பத்தி திறன் மிகவும் முக்கியமானதாகும் என தெரிவித்தார்.






