பூனை வடிவிலான மலைப்பாதை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது..!
பெரு நாட்டில் பெரிய பூனை வடிவத்திலான மலைப்பாதையை தொல்பொருள் ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். தலைநகர் லிமாவுக்கு அருகே உள்ள மலையில் சுமார் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இந்த பிரம்மாண்ட அளவிலான பூனையின் வடிவம் செய்து செதுக்கப்பட்டிருக்கலாம் என்று கலாச்சார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இயற்கை சீற்றங்கள் மற்றும் காலத்தின் மாற்றம் காரணமாக மறைந்துபோன சுமார் 120 அடி நீளம் கொண்ட இந்த மலைப் பாதையை ஆராய்ச்சிக்காக சுத்தம் செய்யும்போது தொல்பொருள் ஆய்வாளர்கள் கண்டுபிடித்தனர்.






