புலிக்குட்டியை சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்ற சிறுமி..!
மெக்சிகோவில் சிறுமி ஒருவர் தனது புலிக்குட்டியை சாலையில் வாக்கிங் அழைத்துச் சென்று அதிர வைத்துள்ளார். வாசே என்ற இடத்தை சேர்ந்த ஒருவர் தனது வீட்டில் வங்கப்புலி குட்டி ஒன்றை வளர்த்து வந்துள்ளார்.
கடந்த சில தினங்களுக்கு முன்பு வீட்டில் அவர் பணியில் இருக்க அவரது மகள் நாயை வாக்கிங் அழைத்துச் செல்வது போன்று தாங்கள் வளர்க்கும் புலிக் குட்டியையும் வாக்கிங் கூட்டிச் சென்று உள்ளார். இதனை கண்டவர்கள் அதிர்ச்சியை வெளிப்படுத்தினர்.






