இந்திய ஜனநாயகம் மோசமான காலகட்டத்தை கடக்கிறது..!
இந்திய ஜனநாயகம் மோசமான காலகட்டத்தை தற்போது கடந்து வருகிறது என காங்கிரஸ் கட்சி தலைவர் சோனியா காந்தி தெரிவித்துள்ளார். டெல்லியில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் கூட்டத்தில் பேசுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
பசுமைப் புரட்சியால் நாடு அடைந்த பலன்களை பறிக்கும் வகையில் வேளாண் சட்டங்கள் கொண்டு வரப்பட்டுள்ளதாக சோனியா காந்தி தெரிவித்தார். நாட்டின் குடிமக்களின் உரிமைகள் மெல்ல மெல்ல ஒரு சில தொழிலதிபர்களின் கைகளுக்கு மாற்றப்பட்டு கொண்டு உள்ளதாகவும் சோனியா காந்தி விமர்சித்தார்.
கோடிக்கணக்கான சிறு விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள், தொழிலாளர்கள் ,சிறிய கடைக்காரர்கள் உள்ளிட்ட பல தரப்பினரும் அரசின் நடவடிக்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களை காக்க கட்சியினர் கைகோர்த்து களம் இறங்க வேண்டும் எனவும் சோனியா காந்தி தெரிவித்தார்.






