இன்று காலை முதல் புறநகர் ரயில்சேவை தொடங்குகிறது..!

Publish by: செய்திப்பிரிவு --- Photo :


சென்னையில் 6 மாதங்களுக்குப் பிறகு இன்று காலை முதல் புறநகர் ரயில்சேவை தொடங்குகிறது. அத்தியாவசிய பணியாளர்களுக்கு மட்டுமே இயக்கப்படும் சிறப்பு ரயிலில் பயணிக்கும் ரயில் நடைமுறை என்ன? வொர்க் மேன் ஸ்பெஷல் என்ற பெயரில் இயக்கப்பட உள்ள புறநகர் சிறப்பு ரயிலில் தமிழக அரசால் அங்கீகரிக்கப்பட்ட அத்தியாவசிய பணிகளில் ஈடுபடும் அரசு ஊழியர்கள் மட்டுமே பயணிக்க முடியும்.

 

சிறப்பு அனுமதி பெற்றவர்கள் மட்டுமே சிறப்பு ரயிலில் பயணிக்க முடியும். அந்த அனுமதி சான்றிதழ் பெறுவதற்கு தனி அதிகாரியை அரசு நியமித்துள்ளது. சிறப்பு அனுமதி சான்றிதழ் பயணம் மேற்கொள்ளும் அரசு ஊழியரின் பெயர்,பதவி, துறை, அலுவலகம் போன்ற விவரங்கள் இடம் பெற்றிருக்கும்.

 

அந்த சிறப்பு அனுமதி சான்றிதழ் உடன் புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டையும் ரயிலில் பயணிப்போர் எடுத்துச் செல்ல வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது. சான்றுகளின் அடிப்படையில் அரசு ஊழியர்களுக்கும் பயணச் சீட்டு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்ட அளவில் உடல் வெப்ப நிலை இருந்தால் மட்டுமே ரயிலில் பயணிக்க அனுமதிக்கப்படுவர் என தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது.

 

குறிப்பிட்ட கால இடைவெளியில் கிருமிநாசினி கொண்டு ரயில் பெட்டிகளை சுத்தம் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அனுமதி சான்றிதழ் பெற்ற அரசு ஊழியர்களைத் தவிர பொதுமக்கள் ரயிலில் பயணம் செய்ய அனுமதி இல்லை.


Leave a Reply