--- --:--:-- --

அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஆம்புலன்ஸ் வர தாமதம் ஆனதால் உயிரிழப்பு..!

13

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளி ஒருவர் 108 ஆம்புலன்ஸ் வருவதற்கு தாமதம் ஆனதால் உயிரிழந்தார். ராணிப்பேட்டையை அடுத்த நவல்பூர் பகுதியை சேர்ந்த விஜயன் என்பவர் மூச்சுத்திணறல் காரணமாக வாலாஜாபேட்டை தலைமை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார்.

 

அங்கிருந்த மருத்துவர்கள் மேல் சிகிச்சைக்காக அவரை வேலூர் அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்ய பரிந்துரை செய்தனர். அதற்காக அழைக்கப்பட்ட 108 ஆம்புலன்ஸ் 3 மணி நேரம் ஆகியும் வராததால் விசயன் மருத்துவமனையில் உயிரிழந்தார்.

 

ஆத்திரமடைந்த உறவினர்கள் விஜயனின் உடலை பெற மறுத்து மருத்துவமனை வளாகத்திலேயே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். காவல்துறையினர் உறவினர்கள் மத்தியில் பேச்சு வார்த்தை நடத்தி ஆம்புலன்ஸ் தாமதம் குறித்து விசாரணை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்ததையடுத்து உடலை உறவினர்கள் பெற்றுக் கொண்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon