நொடி பொழுதில் குழந்தையை காப்பாற்றிய தந்தை..!
சீனாவில் முகம் பார்க்கும் கண்ணாடி விழுவதிலிருந்து குழந்தையை நொடி பொழுதில் தன் தந்தை காப்பாற்றியுள்ளார். வடகிழக்கு பகுதியில் உள்ள கார்பின் என்ற நகரத்தில் இரு குழந்தைகளுடன் வசித்து வரும் பெற்றோர் தங்கள் குழந்தைகளுடன் விளையாடிக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒரு குழந்தை பந்தை தூக்கி போட்ட பின் தடுமாறி விழ அதனால் சுவற்றில் சாய்த்து வைக்கப்பட்டிருந்த முழு நீள கண்ணாடி சரிந்து கீழே படுத்திருந்த மற்றொரு குழந்தையின் மீது சாய்ந்தது.
ஆனால் கண்ணிமைக்கும் நேரத்தில் குழந்தையின் தந்தை பாய்ந்து கண்ணாடியை தாங்கிப்பிடித்து குழந்தையை காப்பாற்றி னார். இந்த வீடியோ வை கண்டு சீன ஊடகங்கள் அந்த தந்தையை சூப்பர் மேன் பாதர் தெரிவித்துள்ளனர்.






