--- --:--:-- --

புதுச்சேரியில் 31-ஆம் தேதி வரை வரும் செவ்வாய்க்கிழமைகளில் முழு ஊரடங்கு..!

6

புதுச்சேரியில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக வரும் 31-ஆம் தேதி வரை அனைத்து செவ்வாய்க் கிழமைகளிலும் முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று முதல் அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் கொரொனாவின் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

 

நேற்று ஒரே நாளில் 481 பேருக்கு தொற்று உறுதியான நிலையில் பாதிப்பு எண்ணிக்கை 6,381 ஆக உயர்ந்துள்ளது. கொரொனாவால் இதுவரை 96 பேர் உயிரிழந்துள்ளனர். இந்நிலையில் தொற்று பரவலை கட்டுப்படுத்துவது குறித்து புதுச்சேரி பேரிடர் மேலாண்மை துறை குழு ஆலோசனை நடத்திய முதல் அமைச்சர் நாராயணசாமி பின்னர் செய்தியாளர்களிடம் பேசினார்.

 

அப்போது புதுச்சேரி மாநிலத்தில் நாளை முதல் காலை 6 மணியிலிருந்து இரவு 7 மணி வரை மட்டுமே கடைகள் திறந்து இருக்க வேண்டும் என்று கூறினார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon