--- --:--:-- --

ஒரே குடும்பத்தை சேர்ந்த 11 பேருக்கு இரவில் விஷ ஊசி போட்டு கொலை..!

7

ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூர் அடுத்த லோட்டா கிராமத்தில் கேபள்ராம் என்பவரின் குடும்பம் வசித்து வந்தது. பாகிஸ்தானில் இருந்து அகதியாக ராஜஸ்தானுக்கு வந்தவர்கள் தங்களிடம் இருந்த பணத்தை கொண்டு பண்ணை ஒன்றை விலைக்கு வாங்கி அதில் விவசாயம் செய்து வந்தனர்.

 

பண்ணையின் ஒரு பக்கத்தில் ஒரு சிறு வீடு ஒன்றை அமைத்திருந்தனர். சம்பவத்தன்று இரவு வீட்டிற்கு வெளியில் படுத்து இருந்த கேபள்ராம் காலையில் கண்விழித்து பார்த்தபோது தோட்டத்திற்குள் சில மாடுகள் மேய்ந்துகொண்டிருந்தன.

 

இதை கண்டு அவர் அதனை விரட்டி விட்டு வீட்டில் உள்ளவர்கள் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள் என சப்தமிட்டு வீட்டிற்குள் சென்று பார்த்துள்ளார். அப்போது வீட்டிற்குள் படுத்திருந்த கேபள்ராம்மின் தந்தை புட்டாரா, அந்தரா தேவி, 4 சகோதர, சகோதரிகள், 5 குழந்தைகள் என பதினோரு பேரும் பேச்சு மூச்சில்லாமல் சடலமாக கிடப்பதை பார்த்து அதிர்ச்சியடைந்தார்.

 

உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் சடலமாக கிடந்த இடத்தின் அருகே சில காலி மருந்து பாட்டில்கள் மற்றும் ஊசி போடும் சிரஞ்சீவி கிடந்தன. மேலும் உயிரிழந்த அனைவரது கைகளிலும் ஏதோ ஊசி போட்டது போல தழும்பு காணப்பட்டது.

 

இதையடுத்து சடலங்களை கைப்பற்றி பிணக்கூறாய்வுக்கு எடுத்துச் சென்ற காவல்துறையினர் 11 பேர் உயிரிழப்புகான காரணம் குறித்து விசாரித்து வருகிறார்கள். இதற்கிடையே கேபள்ராம் தன்னை விட்டு பிரிந்து வாழும் தனது மனைவி ஒரு செவிலியர் என்றும் அவரது தூண்டுதலின் பேரில் தனது குடும்பத்தை சேர்ந்த 16 பேருக்கும் விஷ ஊசி போடப்பட்டு இருக்கலாம் என்று புகார் அளித்துள்ளார்.

 

இதையடுத்து கேபள் ராம்மின் மனைவியை பிடித்து விசாரித்து வரும் காவல்துறையினர் பிணக்கூறாய்வு கிடைத்த பிறகு 11 பேரும் உயிருடன் அதற்கான முறையான காரணம் தெரியவரும் என தெரிவித்திருக்கிறார்கள்.

 

 

இந்த சம்பவத்தில் 11 பேரும் உணவில் விஷம் கலந்து சாப்பிட்டு தற்கொலை செய்திருக்கலாம் என்று முதலில் சந்தேகிக்கப்பட்ட நிலையில் தற்போது அவர்கள் தூங்கிய பின்னர் யாரோ அவர்களை விஷ ஊசி போட்டு கொன்றிருக்கலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon