--- --:--:-- --

தமிழகத்தில் 22 கல்லூரிகள் மூடுவதற்கு அனுமதி கேட்டு விண்ணப்பம்..!

7.1

தமிழகத்தில் 22 கல்லூரிகள் உட்பட நாடு முழுவதும் 179 பொறியியல் உள்ளிட்ட கல்லூரிகள் மூடப்படுகின்றன. இதன் மூலம் பொறியியல், பார்மசி கல்லூரிகள் உள்ளிட்ட தொழில் துறை சார்ந்த கல்லூரிகளில் இந்த ஆண்டு மட்டும் ஒன்றரை லட்சம் இடங்கள் காலி ஆகும் என கூறப்படுகிறது.

 

2020 ஆம் ஆண்டு தொடர்ந்து செயல்பட விரும்பாமல் மூடுவதற்கு அனுமதி கோரி தொழில்நுட்ப கல்விக்கான அகில இந்திய கவுன்சிலிங்குக்கு விண்ணப்பித்துள்ளனர்.

 

இதில் அதிகபட்சமாக உத்தரப்பிரதேசத்தில் இருந்த 31 கல்லூரிகளும், மகாராஷ்டிரா மற்றும் தமிழ்நாட்டில் இருந்து தலா 22 கல்லூரிகளும் அனுமதி கோரி விண்ணப்பித்து உள்ளனர். கடந்த 5 ஆண்டுகளாக இந்த கல்லூரிகளில் காலியிடங்கள் அதிகரித்து வருவதே இதற்கு காரணம் என கூறப்படுகிறது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon