--- --:--:-- --

காவலர்கள் இருவருக்கு கொரோனா எதிரொலி.அன்னூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடல் !!!

3.1

கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் இரு காவலர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதை அடுத்து காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.கோவை மாவட்டத்தில் கொரோனா பாதிப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுவரை 4 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கொரோனா தொற்று காரணமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் காவல் துறையினரும் தொடர்ந்து கொரோனா தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர்.

 

இந்த நிலையில் கோவை மாவட்டம் அன்னூர் காவல் நிலையத்தில் பணிபுரியும் உதவி ஆய்வாளர் மற்றும் சிறப்புப்பிரிவு தலைமை காவலர் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.இதேபோல உதவி ஆய்வாளரின் மனைவிக்கும் தொற்று ஏற்பட்டுள்ளது. உதவி ஆய்வாளர் மற்றும் அவரது மனைவி வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். மேலும், சிறப்பு பிரிவு தலைமை காவலர் ஈ.எஸ்.ஐ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இதையடுத்து அன்னூர் காவல் நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டு கிருமி நாசினி தெளித்து சுத்தம் செய்யப்பட்டது.

 

மேலும்,காவல் நிலையத்திற்கு முன்பு அமைக்கப்பட்டுள்ள கூடாரத்தில் காவல் நிலையம் தற்காலிகமாக செயல்பட்டு வருகிறது.கோவை மாவட்டத்தில் இதுவரை காவல் நிலையங்களில் பணிபுரிந்து வந்த காவலர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதையடுத்து 7 காவல் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon