--- --:--:-- --

தமிழகத்தில் ஆக.31 வரை ஊரடங்கு நீட்டிப்பு : அனைத்து ஞாயிறும் முழு முடக்கம்..! தமிழக அரசு அறிவிப்பு!!

23q4

தமிழகத்தில் ஊரடங்கை ஆகஸ்ட் 31-ந் தேதி வரை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஆகஸ்ட் மாதத்தில் 5 ஞாயிற்றுக் கிழமையும் முழு ஊரடங்கு எனவும், இ பாஸ் கட்டாயம் என்பது தொடரும் என்பது போன்ற அறிவிப்புகளுடன், சில புதிய தளர்வுகளையும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

கொரோனா பரவலை கட்டுப்படுத்த கடந்த மார்ச் 24-ந் தேதி முதல் அடுத்தடுத்து 6 முறை நீட்டிக்கப்பட்ட ஊரடங்கு நாளை நள்ளிரவுடன் முடிவடைகிறது. தமிழகத்தில் கொரோனா தொற்று பரவல் தற்போது மாநிலம் முழுவதும் வேகமாக பரவி வரும் நிலையில், மேலும் ஊரடங்கை நீட்டிப்பாரா? தளர்வுகளை அறிவிப்பதா? என முதல்வர் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை மேற்கொண்டார்.

 

நேற்று மாவட்ட ஆட்சியர்களுடனும், இன்று மருத்துவ நிபுணர் குழுவினருடனும் ஆலோசனை நடத்திய நிலையில், ஊரடங்கு மேலும் ஒரு மாதத்திற்கு நீட்டிக்கப்படுவதாக தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இதில் சில தளர்வுகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தமிழக அரசு அறிவிப்பில் கூறப்பட்டுள்ள முக்கிய அம்சங்கள் வருமாறு:

 

ஆகஸ்ட் 1 முதல் சென்னையில் தனியார் தொழில் நிறுவனங்கள் 75 சதவீத பணியாளர்களுடன் இயங்கலாம்.

 

சென்னையில் உணவகங்களில் 50 சதவீத இருக்கைகளை பயன்படுத்தி வாடிக்கையாளர்கள் அமர்ந்து சாப்பிட அனுமதி . உணவகங்களில் காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை உணவருந்த அனுமதி.

 

ஊராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் ரூ.10 ஆயிரத்திற்கு குறைவான ஆண்டு வருமானம் உள்ள கோவில்களில் தரிசனத்திற்கு அனுமதி.

 

மாநகராட்சி பகுதிகளில் உள்ள எந்த கோவில், மசூதி, தேவாலயங்களிலும் வழிபாட்டுக்கு அனுமதி இல்லை.

 

சென்னையில் காய்கறி, மளிகை கடைகள் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிப்பு.

Subscription

சென்னையில் மற்ற கடைகளும் இயங்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரம் இரவு 7மணி வரை நீட்டிப்பு.

 

அத்தியாவசிய மற்றும் அத்தியாவசியமற்ற என அனைத்து பொருட்களையும் ஆன்லைன் மூலம் விற்பனை செய்ய அனுமதி.

 

மாவட்டம் விட்டு மாவட்டம் செல்ல இ பாஸ் கட்டாயம் என்பது தொடரும்.

 

ஆகஸ்ட் மாதத்தில் உள்ள அனைத்து ஞாயிற்றுகிழமைகளிலும் தளர்வுகளற்ற ஊரடங்கு கடைப்பிடிக்கப்படும்.

 

144 தடை உத்தரவுப்படி 5 நபர்களுக்கு மேல் கூடக்கூடாது என்ற விதி அமலில் இருக்கும்.

 

ரயில், விமானப் போக்குவரத்தில் தற்போதைய நிலை தொடரும்.

 

ஆகஸ்ட் 15ம் தேதி மத்திய அரசின் வழிகாட்டுதல்படி சுதந்திர தினம் கொண்டாடப்படும்.

 

பொது மற்றும் தனியார் பேருந்து போக்குவரத்திற்கான தடையும் தொடர்ந்து நீட்டிப்பு என தமிழக அரசு அறிவித்துள்ளது.

 

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon