--- --:--:-- --

இளம்பெண் மீது தாக்குதல் நடத்திய காவல் அதிகாரி..!

11

ஜார்கண்டில் போலீஸ் அதிகாரி ஒருவர் இளம்பெண்ணின் தலைமுடியை பிடித்து இழுத்து கன்னத்தில் அறையும் வீடியோ வெளியாகி வைரலாகி வருகிறது. இது தொடர்பாக திரைப்பட இயக்குனராக அவினாஷ் தாஸ் டிவிட்டரில் பதிவிட்ட வீடியோவை ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமன் சோரன் ரீட்வீட் செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

 

அதற்கு பதிலளித்துள்ள அம்மாநில டிஜிபி சம்பந்தப்பட்ட காவல் அதிகாரியை பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும் சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த டிஎஸ்பி ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். காவல் அதிகாரியால் தாக்கப்பட்ட பெண் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் காதல் திருமணம் தொடர்பாக புகார் அளிக்க வந்த நிலையில் தாக்கப்பட்டார் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon