சாத்தான்குளம் கொலை வழக்கில் சிபிஐ காவலில் எடுக்கப்பட்ட 3 காவலர்களிடம் விடிய விடிய விசாரணை நடைபெற்றது. காவலர்கள் சாமதுரை, செல்லதுரை, வேலு முத்து ஆகிய மூவரை சிபிஐ காவலில் எடுத்து விசாரிக்க மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றம் அனுமதியளித்தது.
இதனையடுத்து மூன்று காவலர்களுக்கும் முழு உடல் பரிசோதனை மற்றும் கொரொனா பரிசோதனை செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து அவர்களுடன் சிபிஐ அதிகாரிகள் தனித்தனியாக விசாரணை நடத்தி அதை வீடியோவாக பதிவு செய்தனர்.
நாளை மறு நாள் நீதிமன்ற காவல் நிறைவடையும் நிலையில் மூவரையும் சம்பவம் நடந்த சாத்தான் குளத்திற்கு அழைத்து செல்ல இருப்பதாக சிபிஐ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையே கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் ஜெயராஜ் , பென்னிக்ஸ் ஆகியோருக்கு சிகிச்சை அளித்த அரசு மருத்துவர் பாலசுப்பிரமணியனிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர்.