காவல் நிலையங்களில் 3 ஆண்டுகளுக்கு மேலாக பணியாற்றியவர்களுக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம்

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் இரண்டாம் நிலை காவலர்கள் முதல் சிறப்பு சார்பு ஆய்வாளர்கள் வரை கடந்த 30.06.2020 அன்றோடு 3 ஆண்டுகள் பணி நிறைவு செய்தவர்கள் பொது மாறுதலுக்கு (General Transfer) உள்ளானவர்கள் அவர்களில் இன்று முதற்கட்டமாக தூத்துக்குடி மாநகரம், தூத்துக்குடி ஊரகம் மற்றும் கோவில்பட்டி உட்கோட்டங்களில் பணியாற்றும் 213 காவல்துறையினருக்கான பொது மாறுதலுக்கான கலந்தாய்வு கூட்டம் (Counselling for General Transfer) இன்று தூத்துக்குடி மாவட்ட காவல் அலுவலக மைதானத்தில் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

இந்த கலந்தாய்வில் கலந்து கொண்ட காவல்துறையினர் ஏற்கனவே, அவர்கள் பணியாற்றிய காவல் நிலையம் மற்றும் சொந்த பகுதியில் உள்ள காவல் நிலையங்கள் தவிர, அவர்கள் கேட்கும் காவல் நிலையங்கள் அவர்களின் விருப்பத்தின்பேரில் பொதுமாறுதல் வழங்கப்பட்டுள்ளது. ஆகவே அவர்கள் நல்லமுறையிலும், பொதுமக்களிடம் கனிவாகவும் நடந்து கொள்ள வேண்டும் என்றும் பொதுமக்கள் கொடுக்கும் புகார்களுக்கு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ். ஜெயக்குமார் அவர்கள் அறிவுரை வழங்கினார்.

 

இந்த கலந்தாய்வு கூட்டம் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் செல்வன் மற்றும் சமூக நீதி மற்றும் மனித உரிமைகள் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளர் பழனிக்குமார் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. பொதுமாறுதலுக்கான காவல்துறையினர் உட்பட காவல்துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் கலந்து கொண்டனர்.


Leave a Reply