இந்தியாவிலேயே தமிழகம் தான் புதிய முதலீடுகள் செய்வதில் முதலீடு..!
இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கடந்த மூன்று மாதங்களில் அதிக புதிய முதலீடுகள் வந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டில் 18 ஆயிரம் கோடி ரூபாய்க்கு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.
மும்பையை சேர்ந்த பிராஜக்ட்ஸ் டுடே என்ற நிறுவனம் வெளியிட்டிருக்கும் புள்ளிவிபரத்தின் அடிப்படையில் ஏப்ரல் முதல் ஜூன் மாதம் வரை 3 மாதங்களில் நாடு முழுவதும் 97 ஆயிரத்து 850 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது ஆயிரத்து 241 திட்டங்களுக்கான ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன.
கடந்தாண்டு இதே மூன்று மாத காலத்தில் மூன்று லட்சத்து 36 ஆயிரத்து 673 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2,500 புதிய திட்டங்களுக்கான ஒப்பந்தங்களை நாடு முழுவதும் இருக்கும் நிலையில் இந்த ஆண்டு அது வெகுவாக குறைந்துள்ளது. இந்நிலையில் கடந்த ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான மூன்று மாதங்களில் நாட்டிலேயே தமிழகத்தில்தான் அதிக புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் செய்யப்பட்டு உள்ளதாக இந்த புள்ளி விவரம் கூறுகிறது.
தமிழகத்தில் மூன்று மாதங்களில் 18,236 கோடி ரூபாய்க்கு 17 புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. கொரொனா பாதிப்புகளையும் மீறி அதிக அளவில் முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது முக்கியத்துவம் பெறுகிறது.
தமிழகத்திற்கு அடுத்தபடியாக மகாராஷ்டிராவில் 11,229 கோடி ரூபாய்க்கும் உத்தரபிரதேச மாநிலத்தில் 8,878 கோடி ரூபாய்க்கும் புதிய ஒப்பந்தங்கள் செய்யப்பட்டுள்ளன. ஜம்மு காஷ்மீர், தெலுங்கானா, குஜராத், ஒடிசா, மணிப்பூர் மாநிலங்களில் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.






