--- --:--:-- --

சாத்தான்குளம் சம்பவத்தில் 5 காவலர்களிடம் சிபிஐ அதிகாரிகள் தீவிர விசாரணை..!

3.1

சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலை வழக்கில் மதுரை சிபிஐ அலுவலகத்தில் மூன்றாம் நாளாக தீவிர விசாரணை நடைபெற்று வருகிறது. சாத்தான்குளம் தந்தை, மகன் சித்திரவதை கொலை வழக்கு தொடர்பாக கடந்த 10ஆம் தேதி முதல் சிபிஐ விசாரணை செய்து வருகிறது.

 

முதற்கட்டமாக கைது செய்யப்பட்ட காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், சார்பு ஆய்வாளர்கள் ரகுகணேஷ், பாலகிருஷ்ணன், காவலர்கள் முருகன், முத்துராஜ் ஆகிய 5 பேரை சிபிஐ காவலில் எடுத்து விசாரணை செய்து வருகிறது. இன்றுடன் அவர்களது விசாரணை காவல் நிறைவடையவுள்ள நிலையில் மாலை 5.30 மணிக்கு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

 

இந் நிலையில் ஐந்து பேரிடமும் சிபிஐ விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளது. நேற்று முன்தினம் காவலர் முத்துராஜ் மட்டும் சாத்தான்குளம் அழைத்து சென்று விசாரணை நடத்திய சிபிஐ அதிகாரிகள் நேற்று காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் உள்ளிட்ட ஐந்து பேரையும் சாத்தான்குளம் காவல் நிலையம் மற்றும் பென்னிக்ஸ்சின் செல்போன் கடைகளில் விசாரணை நடத்தினர்.

 

காவல் நிலைய எழுத்தரிடமும் விசாரணை நடத்தப் பட்டுள்ள நிலையில் இவ்வழக்கின் முக்கிய சாட்சியாக கருதப்படும் தலைமை காவலர் ரேவதியும், சிபிஐயிடம் வாக்குமூலம் அளித்துள்ளார். இதன் மூலம் சிபிசிஐடி விசாரணை அறிக்கை முத்துராஜாவிடம் நடத்தப்பட்ட விசாரணை விவரங்கள் ரேவதியிடம் அளித்த சாட்சியம் , நடத்தப்பட்ட விசாரணை மற்றும் 5 காவலர்களிடம் நடத்திய விசாரணை தகவல்களை சிபிஐ அதிகாரிகள் ஒப்பீடு செய்கின்றன.

 

இவற்றில் முரண்பாடு உள்ளதா என்பதை ஆய்வு செய்து அதன் அடிப்படையில் இந்த ஐந்து காவலர்களையும் காவலில் எடுத்து விசாரிக்கலாமா? வேண்டாமா? என்ற முடிவை சி‌பி‌ஐ எடுக்க உள்ளதாக தெரிகிறது. இந்த ஐந்து பேரிடம் நடத்தப்பட்ட விசாரணை போதுமானதாக கருதினால் இரண்டாம் கட்டமாக கைது செய்யப்பட்டுள்ள மற்ற 5 காவலர்களை காவலில் எடுத்து விசாரிக்க இன்று நீதிமன்றத்தில் சிபிஐ தரப்பில் மனு தாக்கல் செய்யப்பட வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon