பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை..!
திருச்சி மணப்பாறையை சேர்ந்த பெண் காவலர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளும் வீடியோ பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விஷம் குடித்து உயிரிழந்தவர் வையம்பட்டி காவல் நிலையத்தில் முதல் நிலை காவலராக பணியாற்றி வந்த பவானி. திருச்சி – கோவை சாலையில் கீரனூர் என்ற இடத்தில் வைத்து இவர் விஷயத்தை குளிர் பானத்தில் கலக்கி குடித்துள்ளார்.
அதனை வீடியோவில் பதிவு செய்து வாட்ஸ்அப் மூலம் நண்பர்களுடன் பவானி பகிர்ந்து கொண்டுள்ளார். 28 ஆம் தேதி விஷம் குடித்த பவானி மூன்று நாட்கள் அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி திருச்சி அரசு மருத்துவமனையில் உயிரிழந்தார். 6 ஆண்டுகளுக்கு மேலாக கணவரைப் பிரிந்து வாழ்ந்த பவானிக்கு ஒரு மகள் இருக்கிறார்.
அவரது தற்கொலைக்கு பணப் பிரச்சினையா அல்லது வேறு ஏதேனும் காரணமா என காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.






