--- --:--:-- --

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்க 75 கோடி ரூபாய் நிதி !

1

அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் குழாய் அமைக்கும் பணிகளை மேற்கொள்ள சுமார் 75 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு முதலமைச்சர் ஆணை பிறப்பித்துள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.

 

இது தொடர்பாக அமைச்சர் விஜயபாஸ்கர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் விலைமதிப்பற்ற உயிர்களைக் காக்கும் ஊசி, மருந்துகளை மாவட்ட அளவில் இருப்பில் வைத்து கொரோனா சிகிச்சை முறைகளை வலுவூட்டி வருவதாக குறிப்பிட்டிருக்கிறார். இதன் ஒரு அங்கமாக ஆக்சிஜன் குழாய்களை பொதுப்பணித் துறையின் மூலம் அமைப்பதற்கு முதற்கட்டமாக 75 கோடியே 28 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கி முதலமைச்சர் உத்தரவிட்டு இருப்பதாக தெரிவித்தார்.

 

இந்த நிதி ஒதுக்கீடு தமிழகத்தில் உள்ள 59 அரசு மருத்துவமனைகளில் ஆக்சிஜன் செல்லும் குழாய்கள் அமைப்பதற்கும் சலவையகம் மத்திய கிருமி நீக்க மையம் ஆகியவற்றை வலுப்படுத்தவும் பயன்படுத்தப்படும் என்று அவர் கூறியுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon