எட்டயபுரதில், காவலர்கள் தாக்கியதில் மன வேதனையில் வாலிபர் தற்கொலை
தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் பகுதியில் உள்ள பெருமாள் கோவில் தெருவை சேர்ந்தவர் கண்ணன் மகன் கணேசமூர்த்தி 27 இவர் கடந்த 20 ஆம் தேதி தனது நண்பர்களுடன் சென்று மது அருந்தியாக கூறப்படுகிறது. அப்போது அங்கு வந்த காவல்துறை ஊரடங்கு நேரத்தில் 10க்கும் மேற்பட்டோர் அங்கு குவிந்து இருப்பதாக கூறி தாக்கியுள்ளர்கள் இதில் கணேசமூர்த்தி போலீஸ்காரர்கள் பலமாக தாக்கப்பட்டுள்ளார். மேலும் அவரது இருசக்கர வாகனத்தை காவல்துறையினர் பறிமுதல் செய்துஉள்ளனர். இதனால் கணேசமூர்த்தி மனவேதனையில் இருந்து வந்துள்ளார்.
இந்நிலையில் நேற்று அவர் தனது வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்து எட்டயபுரம் காவல் இன்ஸ்பெக்டர் கலா மற்றும் போலீஸ்காா்ர் சம்பவ இடத்திற்கு சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக எட்டயபுரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அப்போது அவர் சட்டைப் பையில் வைத்திருந்த ஒரு கடிதத்தை போலீஸ் கைப்பற்றினர். அந்த கடிதத்தில் அவர் தனது மரணத்திற்கு எட்டயபுரம் காவல்துறையினர் காரணம் என்று குறிப்பிட்டுள்ளதாக கூறப்படுகிறது. மேலும் தனது மகனை போலீஸ்காரர்கள் அடித்ததால் மனவேதனையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாக அவரது தந்தை குற்றம்சாட்டியுள்ளார்.
மேலும் கணேசமூர்த்தி ஒரு சமுதாய அறக்கட்டளையின் உறுப்பினராக உள்ளார். இதனால் அந்த அறக்கட்டளை உறுப்பினர்கள், சமுதாயத்தினர் எட்டயபுரம் அரசு மருத்துவமனையில் முற்றுகையிட்டுள்ளனர். சம்பவ இடத்தை விளாத்திகுளம் டிஎஸ்பி பீர் முகைதீன், தூத்துக்குடி மாவட்ட எஸ்பி அருண் பாலகோபாலன் ஆகியோர் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் எட்டையபுரம் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாத்தான்குளத்தில் தந்தை மகன் போலீஸ் தாக்கியதால் உயிரிழந்ததாக பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ள நிலையில் மேலும் ஒரு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.






