--- --:--:-- --

நாட்டிலேயே நோயை வைத்து அரசியல் செய்து வரும் ஒரே தலைவர் மு..க.ஸ்டாலின் தான் முதல்வர் பழனிச்சாமி குற்றச்சாட்டு !!!

0.2

கோவையில் ரூ.238 கோடி மதிப்பிலான திட்டங்களை தொடங்கி வைத்தார் முதல்வர் பழனிசாமி வைத்த பின்பு கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும்,அவினாசி-அத்திக்கடவு திட்டப்பணிகள் குறித்து ஆலோனைக்கூட்டம் நடைபெற்றது.அதனைத்தொடர்ந்து தொழிற்துறையினர்,விவசாய சங்கத்தினர் மற்றும் மகளிர் சுய உதவிக்குழுவினருடன் கலந்துரையாடினார்.

 

இந்நிகழ்ச்சியில் உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி,துணை சபாநாயகர் பொள்ளாச்சி ஜெயராமன், மாவட்ட ஆட்சியர் ராசாமணி, சட்டமன்ற உறுப்பினர்கள் அம்மன் அர்ச்சுணன், பி.ஆர்.ஜி அருண்குமார், வி.சி.ஆறுக்குட்டி,வி.பி. கந்தசாமி, எட்டிமடை சண்முகம், கஸ்தூரி வாசு,மாநகராட்சி ஆணையர் ஷ்ரவண் குமார் ஜடாவத்,மேற்கு மண்டல ஐ.ஜி. பெரியய்யா, மாநகர காவல் ஆணையர் சுமித் சரண், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித் குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பலர் பங்கேற்றனர்.

 

பின்னர்,செய்தியாளர்களை சந்தித்த முதல்வர் எடப்பாடி பழனிசாமி ” கோவை மாவட்டத்தில் 36,905 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும்,கோவை மாவட்டத்தில் 292 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு , 112 பேர் சிகிச்சையில் உள்ளனர் எனவும், கொரோனா குறித்து மக்களுக்கு அரசு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. கிருமி நாசினி தெளிப்பு உள்ளிட்ட நடவடிக்கையால் கொரோனா கட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும்,கோவை மாவட்டத்தில் குடிமராமத்து பணி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.

மேலும்,அத்திக்கடவு- அவினாசி திட்டம் வரும் டிசம்பருக்குள் செயல்பாட்டுக்கு வரும் எனவும்,பரம்பிக்குளம் – ஆழியாறு திட்டம்,ஆனைமலையாறு-நல்லாறு திட்டம் உள்ளிட்ட திட்டங்களை கேரள அரசுடன் பேசி விரைந்து செயல்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.

 

மேலும்,நாட்டிலேயே நோயை வைத்து அரசியல் செய்து வரும் ஒரே தலைவர் மு.க.ஸ்டாலின் தான்.
மருத்துவ நிபுணர் சொல்லும் வழிமுறையை பின்பற்ற வேண்டும் என கூறியதை விமர்சிக்கிறார் மு.க.ஸ்டாலின் எனவும், மருத்துவ நிபுணர் குழு அறிவுரைகளை பின்பற்றியிருந்தால் ஒரு எம்எல்ஏவை இழந்திருக்க அவசியமில்லை எனவும் பேசினார்.

 

மேலும்,மாவட்டந்தோறும் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் குறித்து தனது தலைமையில் ஆலோசனை நடைபெறும்.அதன் முதலில் கோவையில் துவங்கியுள்ளதாகவும்,தமிழகத்தில் கொரோனா தொற்று சமூக பரவலாக மாறவில்லை என முதல்வர் பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார் “.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon