--- --:--:-- --

மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வாகியுள்ள மூவர்!

14

ஜோதிராதித்ய சிந்தியா, திக் விஜய் சிங், சிபு சோரன் உள்ளிட்ட 19 பேர் மாநிலங்களவை உறுப்பினர்களாக தேர்வாகியுள்ளனர். பல்வேறு மாநிலங்களில் காலியான மாநிலங்களவை பதவிகளுக்கு கடந்த மார்ச் மாதம் நடைபெறவிருந்த தேர்தல் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக தள்ளிவைக்கப்பட்டு நேற்று நடைபெற்றது.

 

இதில் காங்கிரஸில் இருந்து விலகி இந்த ஆண்டு தொடக்கத்தில் பாரதிய ஜனதாவில் இணைந்த ஜோதிராதித்ய சிந்தியா, சுமர் சிங் சோலங்கி, காங்கிரஸ் மூத்த தலைவர் திக் விஜய் சிங் ஆகிய 3 பேரும் மத்திய பிரதேசத்தில் இருந்து தேர்வாகினர். ஜார்கண்ட் மாநில முன்னாள் முதலமைச்சர் சிபுசோரனும் மாநிலங்களவை தேர்தலில் வெற்றிபெற்றார்.

 

ஆந்திராவில் 4 எம்பிக்கள் இடங்களையும், ஆளும் ஒய்‌எஸ்‌ஆர் காங்கிரஸ் கட்சி கைப்பற்றியது. ராஜஸ்தானில் தேர்தல் நடைபெற்ற மூன்று இடங்களில் இரண்டில் ஆளும் காங்கிரஸ் கட்சியும், எதிர்க் கட்சியான பாரதிய ஜனதா ஒரு இடத்திலும் வெற்றிபெற்றன.

 

காங்கிரஸ் சார்பில் அந்தக் கட்சியின் தேசிய செயலாளர் கே சி வேணுகோபால், மாநில இளைஞர் காங்கிரஸ் முன்னாள் தலைவர் நீரஜ் தங்கியும், பாரதிய ஜனதா சார்பில் அந்தக் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் ராஜேந்திர கெலாட்டும் மாநிலங்களவைக்கு தேர்வானார்கள். கர்நாடகாவில் 4 இடங்களுக்கும், அருணாச்சல பிரதேசத்தில் ஒரு இடத்திற்கும் வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon