பெற்ற குழந்தையின் முன்பே நண்பர்களுடன் சேர்ந்து மனைவியை கூட்டு பாலியல் பலாத்காரம் செய்த கொடூரன்!
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தை அடுத்த கடினம்குலம் என்ற இடத்தை சேர்ந்த போதைக்கு அடிமையான கணவன் ஒருவன் தனது மனைவி மற்றும் மகனை கடற்கரைக்கு அழைத்து செல்கிறேன் என்று வீட்டில் இருந்து வெளியே அழைத்து சென்றிருக்கிறார். ஆனால் கடற்கரைக்கு செல்லாமல் தனது நண்பனின் வீட்டிற்கு அழைத்து சென்றதாக கூறப்படுகிறது.
அங்கு நடைபெற்ற விருந்து நிகழ்ச்சியில் மனைவிக்கு கட்டாயப்படுத்தி மது ஊற்றி கொடுத்த கணவன் தனது கூட்டாளிகள் ஆறு பேருடன் சேர்ந்து புதுகுறிச்சியிலுள்ள பத்து ஏக்கர் பரப்பளவில் உள்ள பண்ணை வீட்டிற்கு தூக்கிச் சென்றதாக சொல்லப்படுகிறது. ஐந்து வயது மகனுடன் இருப்பதைப் பற்றி சிறிதும் யோசிக்காமல் அந்த கொடூர கும்பல் அந்த பெண்ணை பலாத்காரம் செய்து இருக்கிறது.
அதனை தடுக்க முயன்று சிறுவனையும் அடித்து துன்புறுத்தி வெளியேற்றியுள்ளனர். ஒரு கட்டத்தில் அந்த பெண்ணின் உடலில் சிகரெட்டால் சூடு வைத்து சித்ரவதை செய்து இருப்பதாக சொல்லப்படுகிறது. நீண்ட போராட்டத்திற்குப் பின்னர் போதையில் தள்ளாடிய அந்த கொடூர கும்பலிடம் இருந்து தப்பிய அந்தப் பெண் தனது மகனுடன் சாலைக்கு வந்து அந்த வழியாக சென்ற கார் ஒன்றை மறித்து அதில் வந்தவர்களிடம் உதவி கேட்டிருக்கிறார்.
கிழிந்த ஆடையுடன் பரிதாபமாக காட்சியளித்த அந்த பெண்ணை கண்டவர்கள் உடனடியாக காவல் நிலையத்திற்கு தகவல் கொடுத்திருக்கின்றனர். விரைந்து சென்ற போலீசார் போதைக்கு அடிமையானதால் கொடூர செயலில் ஈடுபட்ட கணவன் மற்றும் அவனது நண்பனையும் கை விலங்கு பூட்டி கைது செய்தனர்.
விசாரணையில் அந்தப் பெண்ணின் கணவனுக்கு மட்டுமல்லாமல் அவனது கூட்டாளிகள் அனைவருக்கும் கிரிமினல் பின்னணி இருப்பதை போலீசார் கண்டுபிடித்து இருக்கின்றனர்.
சிறுவனை அடித்து துன்புறுத்தியதால் கொடூரர்கள் மீது போக்சோ உள்ளிட்ட 10க்கும் மேற்பட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டிருப்பதாக திருவனந்தபுரம் அசோக்குமார் தெரிவித்திருக்கிறார். வழக்கு விசாரணை முடியும் வரை பாதிக்கப்பட்ட அந்த பெண்ணுக்கு முழு பாதுகாப்பு அளிக்கப்படும் என்று மாநில மகளிர் ஆணையம் தெரிவித்திருக்கிறது.
இந்த கூட்டு பாலியல் சம்பவம் கடவுளின் தேசம் என கூறிக்கொள்ளும் கேரளத்தை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. அண்மையில் அண்ணாச்சி பழத்திற்குள் வெடிவைத்து கர்ப்பமான யானையைக் கொன்ற கொடூரர்கள் அதை தொடர்ந்து பெற்ற மகன் முன்னே நண்பனுடன் சேர்ந்து பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் மனிதாபிமானமற்ற செயலை உச்சகட்டமாக பார்க்கப்படுகிறது.






