வெட்டுக்கிளியை அழிக்க இளைஞர் கண்டுபிடித்துள்ள இயந்திரம்! ஒரே வினாடியில் 100 வெட்டுக்கிளிகளை கொல்லும் திறன்!
திருச்சி, அண்ணா பல்கலைக்கழகத்தில் மூன்றாம் ஆண்டு பொறியியல் படித்து வரும் உதயகுமார் என்ற மாணவர் மின்சாரத்தால் இயங்கும் லோகஸ்ட் இ கில்லர் என்ற இயந்திரத்தை வடிவமைத்துள்ளார். இளம்பிள்ளை அருகே உள்ள பெருமாள் கொண்டம்பட்டியை சேர்ந்த உதயகுமாரின் இந்த கண்டுபிடிப்பு இரும்பு கூண்டு போன்ற வடிவில் காணப்படுகிறது.
இயந்திரத்திற்குள் பொருத்தப்பட்டுள்ள மின்விளக்கை சுற்றிலும் இரண்டு அடுக்குகளாக வெட்டுக்கிளிகள் நுழையும் அளவுக்கு இடைவெளியுடன் இரும்பு வலைகளை பொருத்தியுள்ளார். இந்த இரும்பு வளைகளில் மனித உடலை தாக்காத வகையில் மாற்றம் செய்யப்பட்ட மின்சாரம் பாய்ந்து கொண்டிருக்கும் அதாவது இயல்பாக மனித உடலில் தாங்கும் 230 வோல்ட் 6 திசை மின்னோட்டம் ஆனது சாதனம் ஒன்றின் மூலம் மனித உடலை தாக்காத வண்ணம் 48 வோல்ட்டாக குறைக்கப்படுகிறது.
பூச்சிகள் இவற்றில் சிக்கும் போது இறந்து போகும். மேலும் இயல்பாகவே விளக்கொளியை பார்த்துவரும் வெட்டுக்கிளிகள் இந்த இரும்பு கம்பியை கடந்து செல்ல முற்படும் போது மின்சாரம் தாக்கி உயிர் இறக்கும் என்கிறார். உதயகுமார் வினாடிக்கு 100 வெட்டுக்கிளிகள் வரை இந்த இயந்திரம் கொள்ளும் என்று கூறிய இவர் நான்கு நாட்களில் 17 கோடி வெட்டுக்கிளிகள் வரை அது கொள்ளும் என்கிறார்.
வெட்டுக்கிளிகளை கொல்ல ரசாயன பூச்சிக்கொல்லிகளை பயன்படுத்துவதால் பயிர்கள் நாசம் ஆகும் என்று கூறும் உதயகுமார் மனித உடலுக்கு தீங்கு விளைவிக்காத அதேசமயம் குறைந்த அளவே மின்சார நுகர்வு கொண்ட தனது கண்டுபிடிப்பின் மூலம் விரைவாகவும் அதிக அளவிலும் பாதிப்பில்லாமல் வெட்டுக்கிளிகளை கொல்லலாம் என்கிறார்.
அப்படி கொல்லப்படும் வெட்டுக்கிளிகளைநிலத்துக்கு அடியுரமாக பயன்படுத்திக் கொள்ளலாம் என்றும் உதயகுமார் கூறுகிறார். இந்த சாதனத்தை உரிய ஆய்வு செய்து அது வெட்டுக்கிளிகளை கொள்வது உறுதி ஆனால் அதிகாரிகள் இந்த இளைஞரை ஊக்குவிக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு.






