ஆணாக இருந்து பெண்ணாக மாறிய நடனக்கலைஞர்..! தீபக் என்ற பெயர் தீபிகா என மாற்றம்!
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் புகழ்மிக்க மேடை நடன கலைஞராக விளங்கிய தீபக் தன்னை ஒரு பெண்ணாக உணர தொடங்கி பாலின மாற்று அறுவை சிகிச்சைக்கு பின்னர் இப்போது முழுமையான பெண் உடலுடன் காட்சியளிக்கிறார். டெல்லியில் நடைபெற்ற சிகிச்சைக்கு பின்னர் அவர் பெண்ணாக தமது சொந்த ஊருக்கு திரும்பி வந்தார்.
அவருக்கு மேக்கப் செய்ய கீதாஞ்சலி என்ற பெண்ணையும் அவர் நியமித்துள்ளார். நகைகள், பெண் ஆடைகளுடன் அவர் ஒரு மணப்பெண் போல் அலங்கரித்து காட்சியளித்தார். இப்போது அவர் பெயர் தீபக் அல்ல அதை தீபிகா என்றும் அவர் மாற்றிக் கொண்டு விட்டார்.






