--- --:--:-- --

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இன்று முதல் ஹால்டிக்கெட் !

7

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் இன்று முதல் ஹால்டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் 11 மற்றும் 12 ஆம் வகுப்புகள் நடைபெற்று வந்த பொதுத்தேர்வுகள் கொரொனா ஊரடங்கால் தடை பட்டது.

 

இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி பதினொன்றாம் வகுப்புக்கு நிலுவையில் உள்ள தேர்வும், பதினெட்டாம் தேதி 12ஆம் வகுப்பு தேர்வு எழுதாத மாணவர்களுக்கு மறு தேர்வு நடைபெற உள்ளது . இதனிடையே வரும் 15ஆம் தேதி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு தொடங்க உள்ளது. இந்த நிலையில் இன்று முதல் ஹால் டிக்கெட் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசு தேர்வுகள் இயக்ககம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

 

10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்கள் பள்ளி தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு ஹால் டிக்கெட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் எனவும் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon