--- --:--:-- --

கொரோனா தடுப்புப்பணியின் போது உயிரிழந்த செவிலியர் குடும்பத்துக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி

29

கொரொனா தடுப்பு பணியின் போது உயிரிழந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிவாரண நிதி வழங்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார். முதலமைச்சர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் சென்னை ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு தொடர்புடைய பணியில் ஈடுபட்டிருந்த செவிலியர் ஜோன் மேரி பிரிசில்லா உடல் நலக்குறைவால் உயிரிழந்தார் என்ற செய்தி அறிந்து மிகுந்த மனவேதனை அடைந்ததாக தெரிவித்துள்ளார்.

 

ஜோன் மேரி பிரிசில்லாவின் சேவை அங்கீகரிக்கும் விதமாக குடும்பத்திற்கு 5 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்க தாம் உத்தரவிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon