--- --:--:-- --

சேலத்தில் கணவரால் கைவிடப்படும் இளம் பெண்களை ஆசை வார்த்தை கூறி பாலியல் தொழில் தள்ளிய கும்பல்!

2

சேலத்தில் இளம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து அவர்களை மிரட்டி பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற புகாரில் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சேலம் சுற்றுவட்டாரத்தில் வறுமையில் வாடிய மற்றும் கணவரால் கைவிடப்பட்ட பெண்களை ஒரு கும்பல் அணுகியது. உங்கள் வறுமையை போக்கி வளமான வாழ்வுக்கு வழிகாட்டுவோம் என அவர்களிடம் அந்த கும்பல் உறுதியளித்தது.

 

தண்ணீரில் தத்தளித்த அவர்கள் கையில் எது கிடைத்தாலும் பிடித்துக் கொள்வதை போல அந்தப் பெண்களும் வந்தவர்கள் சொன்ன வார்த்தைகளை நம்பினார்கள். தன்னம்பிக்கை தரும் சொற்களைக் பெண்களிடம் சொல்லி அவர்களை நம்ம வைத்த கும்பலின் தலைவர் சேலம் தாதகாப்பட்டி சேர்ந்த லோகநாதன். இளம்பெண்களை வீட்டிற்கு வரவழைக்கும் லோகநாதன் தமது மனைவியை அவர்களிடம் பேச வைப்பார்.

 

தாங்கள் சொல்வதை செய்தால் கை நிறைய பணம், வசதியான வாழ்க்கை திரைப்படத்தில் ஒரே பாடலில் பணக்காரர் ஆவது போல் செல்வந்தர் ஆகி விடலாம் என்றெல்லாம் இளம் பெண்களின் ஆசையை தோன்றுவார் லோகநாதனின் மனைவி. பெண்களின் மனதைக் கரைத்த பிறகு அவர்கள் செய்ய வேண்டியது என்ன என்பதை கூறுவார்கள்.

 

தங்களை ஆபாசமாக படம் எடுக்க அந்த பெண் அனுமதிக்க வேண்டும் என்பதை எளிதில் பணம் சம்பாதிப்பதற்கு லோகநாதன் கும்பல் சொல்லும் ஆலோசனையில் வறுமை ஒருபக்கம் பணத்தாசை மறுபக்கம் என இருதலைக் கொள்ளி எறும்பாய் தவிக்கும் இளம் பெண்களை ஆபாசமாக படம் எடுத்து விடுவார்கள்.

 

அதன் பிறகு தாங்கள் சொல்வதை செய்யாவிட்டால் வீடியோவை இணையத்தில் வெளியிடுவோம் என அவர்களை மிரட்டுவார்கள். தொழிலதிபர்களுடன் இளம்பெண்களை நெருங்கி பழக வைத்து அதனை புகைப்படம் எடுத்து அவர்களிடமும் பணம் பறித்திருக்கிறது லோகநாதன் கும்பல்.

 

பாதிக்கப்பட்ட பெண்களில் சிலர் புகார் அளிக்க லோகநாதன் மற்றும் அவர்களது நண்பர்கள் பிரதீப், சிவா ஆகியோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். இந்த மோசடிக்கு லோகநாதனின் தந்தை ரகுவும் உடந்தை என்று கூறப்படுகிறது.

 

அவரிடம் விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர் லோகநாதனின் மனைவியை தேடி வருகிறார்கள். லோகநாதன் கும்பலால் 6 இளம்பெண்கள் பாதிக்கப்பட்டிருப்பது காவல்துறை விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon