--- --:--:-- --

மதுரையில் விடுப்பு எடுக்காமல் 51 நாள்கள் பணியாற்றிய அரசு பேருந்து ஓட்டுநர்..!

5

பொது முடக்க காலத்தில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள பேருந்து ஓட்டுனர் ஒருவர் விடுப்பு எடுக்காமல் பணியாற்றியிருக்கிறார். கொரொனா பரவலை தடுக்க தமிழகத்தில் பொது போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

 

இந்நிலையில் அத்தியாவசிய பணிகளில் ஈடுபட்டுள்ள மருத்துவர்கள், செவிலியர்கள், சுகாதாரப் பணியாளர்கள் உள்ளிட்டவர்களை அழைத்து வருவதற்காக மதுரை மாவட்டத்தில் 22 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. ஆனால் கொரொனா அச்சம் காரணமாக பேருந்துகளை இயக்க ஓட்டுனர்கள் தயக்கம் காட்டி வந்தனர்.

 

இந்நிலையில் மதுரையிலிருந்து நெல்லை வழித்தட பேருந்தை இயக்கி வந்த மேல பனங்காடியை சேர்ந்த ஓட்டுநர் சக்திவேலை பணிக்கு வர அழைப்பு விடுக்கப்பட்டது. சக்திவேலின் குடும்ப உறுப்பினர்கள் சற்று தயக்கம் காட்டிய போதிலும் அவர்களை சமாதானம் செய்து ஏப்ரல் மூன்றாம் தேதி முதல் பணியில் சேர்ந்தார்.

 

நாள்தோறும் காலை 6 மணி முதல் இரவு 9.30 மணி வரை அழகர்கோவில் பகுதியில் இருந்து மதுரை அரசு மருத்துவமனைக்கு பேருந்தை இயக்கி சிறப்பாக தன்னுடைய பணியை தொடர்ந்தார். சக்திவேல் பணிக்கு சேர்ந்த நாள் முதல் கிட்டத்தட்ட 51 நாட்கள் விடுப்பு எடுக்காமல் பணியாற்றியிருக்கிறார்.

 

இவருடைய சேவையை பாராட்டி தினந்தோறும் பேருந்தில் பயணித்த சுகாதாரப் பணியாளர்கள் பரிசு ஒன்றை வழங்கியுள்ளனர். 10 ஆண்டுகாலம் அரசு பணியில் இருந்தாலும் இந்த 51 நாட்கள் தன்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாது என்றும் உயிரை துச்சமென கருதி எதிர்த்து பணிபுரியும் ஊழியர்களை பாதுகாப்பாக அழைத்துச் செல்வதை மிகவும் பெருமையாக கருதியதாகவும் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார் சக்திவேல்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon