--- --:--:-- --

இந்தியாவில் கொரோனாவால் 24 மணி நேரத்தில் 194 பேர் உயிரிழப்பு ! உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது!

4

இந்தியாவில் கடந்த 24 மணிநேரத்தில் 194 பேர் கொரொனாவால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்தை கடந்துள்ளது. மேலும் தொடர்ந்து ஏழாவது நாளாக ஆறாயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 24 மணிநேரத்தில் 5,566 பேர் கொரோனாவால் புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

 

இதனால் நாட்டில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை ஒரு லட்சத்து 58 ஆயிரத்து 333 ஆக அதிகரித்துள்ளது. ஒரே நாளில் 194 பேர் உயிரிழந்த நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை 4 ஆயிரத்து 531 ஆக உயர்ந்திருக்கிறது. இதுவரை 67 ஆயிரத்து 792 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

 

தற்போது 86 ஆயிரத்து 110 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மாநில வாரியாக பாதிக்கப்பட்டோரின் பட்டியலில் மகாராஷ்டிரா முதலிடத்தில் உள்ளது. அந்த மாநிலத்தில் இதுவரை 56 ஆயிரத்து 948 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 1,897 பேர் உயிரிழந்துள்ளனர். இரண்டாவது இடத்தில் தமிழ்நாடு உள்ளது. 18 ஆயிரத்து 545 பேர் கொரோனாவால் பாதிக்கப் பட்டிருக்கும் நிலையில் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.

 

பாதிக்கப்பட்ட 15 ஆயிரத்து 257 பேருடன் டெல்லி மூன்றாவது இடத்திலும், 15 ஆயிரத்து 195 பேருடன் குஜராத்தில் நான்காவது இடத்திலும் உள்ளன. ஆனால் உயிரிழப்பு எண்ணிக்கையில் மகாராஷ்டிராவுக்கு அடுத்தபடியாக குஜராத் மாநிலத்தில் 938 பேர் உயிரிழந்துள்ளனர்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon