திருப்பூர் மாவட்டத்தில் நேற்று இடியுடன் கூடிய கனமழை பெய்தது. இதன் காரணமாக சாலை ஓரம் இருக்கும் மரங்கள் முறிந்து மின்கம்பங்கள் மீது விழுந்து மின்கம்பங்கள் சேதமடைந்தன. குறிப்பாக 25வார்டு பகுதியில் சிறுபூலுவப்பட்டி,கீதா நகர் 2வதுவீதி, அம்மன் நகர், திருஆவினன்குடி நகர், காவிலிபாளையம்,போன்ற பகுதிகளில் மின்கம்பங்கள் அதிகமாக சேதமடைந்தன .
இதனை கண்ட அப்பகுதி மக்கள் அச்சத்துடன் மின்வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்து வந்த மின்வாரிய அதிகாரிகள்மின் துண்டிப்பு ஏற்படுத்திவிட்டு மின் கம்பங்களை சரி செய்தனர் .இதனால் அப்பகுதியில் இரண்டு மணி நேரம்மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.